Pages

Thursday, April 4, 2013

ஒரு நாட்டை அணுகுண்டு வீசித்தான் அழிக்கவேண்டும் என்றில்லை
உணவு தானியங்கள் கலை தாவரங்கள் மூலமாகவும் அழிக்கலாம். # படித்ததில் யோசிக்கவைத்தது.

Thursday, February 14, 2013

காதலர் தினம் அன்று காதலிக்கறவங்க என்ன பண்ணுவாங்கனு நமக்கு தேவையில்லாத விஷயம். ஆனா காதலிக்காதவங்க என்ன யோசிப்பாங்க?
1) Girlfriend இல்லாத பையன் Bike start பண்ணும் போது back சீட்ட பாவமா ஒரு லுக் விடுவான்.
2) Boyfriend இல்லாத பொண்ணுங்க யாராவது நமக்கு propose பண்ணிட்டா என்ன பண்றதுங்கற பயத்துலேயே இருப்பாங்க(ஆனா எதிர்பார்ப்போடு இருப்பாங்க).
3) சிலர் தனக்கு யாராவது propose பண்ண மாட்டங்களா என்ற feelings ஓடவே இருப்பாங்க.
4) சிலர் அடுத்த Valentines day'குள்ள யாரையாவது கரெக்ட் பண்ணனும்னு target எல்லாம் பிக்ஸ் பண்ணுவாங்க.

இதுல எதையும் நா யோசிக்களை, நம்புங்க.

Tuesday, January 8, 2013

காதல்
சுவாசிக்க என்ற நிலைமாறி
யாசிக்க என்ற நிலை மறந்து
யோசிக்க என்ற நிலைக்கு
வந்துவிட்டதாக தோன்றுகிறது
இன்றைய காதல்
யோசிக்க கூட  நேரம் கொடுப்பதில்லை
அப்புறம் எங்கே கவிதை எழுத!!

Tuesday, December 11, 2012

பாரதி

பாரதத்தின் தீ
எரிந்தப்பொழுது எரிமலையாய்
மடிந்தபொழுதும் அனலாய்
தகதகத்து கொண்டிருக்கிறான்
"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்ற சாட்டையை வீசி
தன் தலைமுறைக்கு எதிரியாகி
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டினான்
எம் தமிழுக்கு தலைமகன்
இந்த தரணியில் பிறந்த திருமகன்
இவனை நேரில் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்க மறந்ததில்லை
இவன் போல் எவனும் இல்லை
இவனை விட பெரியோன் எவனுமில்லை

தைரிய தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
வாழ்க எம் பாரதி
வாழ்க தமிழ் !!