Pages

Friday, September 24, 2010

வாழ்க்கை.

 திரும்பி பார்க்கும் தூரமில்லை,
விரும்பி கேட்கும் வசதியுமில்லை.
நினைத்து பார்க்க நேரமில்லை,
நினைவு என்றும் மறைவதில்லை.
வளமாய் என்றும் இருப்பதில்லை,
வீழ்ச்சி என்பது முடிவும் இல்லை.

Tuesday, September 21, 2010

நிகழ்காலம்??

காசு இருந்தாதான்
கடவுளை பார்க்கமுடியும்
அது இறந்தகாலம்.
காசு இருந்தாதான்
கடவுளும் பார்க்கிறார்
இது நிகழ்காலம்.

ஏ நிலவே!!!

நீ 
வைரமாய் கடல் விழுந்து
வேகமாய் அலை எழுப்பி
கொஞ்சமாய்
கால் தழுவி
முழுவதுமாய்
என்னை அனைத்து
மெதுவாய் 
கற்பனையில் கரைந்து
நீ மறைந்து போனாயோ!!!

சூரியன்


மொட்டுக்கள் கூட
உன் வரவுக்காக
காத்திருக்கின்றன மலர்வதற்கு!!
ஐந்தும் ஆறும்
உன் தரிசனத்தில் தான்
உயிர் பெறும்!!
கருப்புக்கொடி காட்டினாலும்
உன் கடைமையை செய்கிறாய்!!
கடலில் விழுந்தாலும்
கரை சேர மறுக்கிறாய்!!
கவிஞர்கள் யாரும்
உன்னை வர்ணித்து
கவிதை எழுதுவதில்லை,
எழுதவும் நினைப்பதில்லை.
ஆனாலும்
நீ இல்லாமல் இந்த
உலகில்லை.
நீயும் அழகே!!!
சுட்டெரிக்கும் அழகு!!!

Thursday, September 16, 2010

காதல் இன்னும் வரவில்லை!!!

முத்தங்கள் பரிமாறிக்கொள்ள
உதடுகள் இல்லை.
சந்தங்கள் சரளமாய் பாட
சங்கீதம் இல்லை.
தேடிச்செல்ல தோன்றவில்லை
தேடி வருவதும் தெரிவதில்லை
காத்திருப்பு நரகமாக
கவிதை ஒன்றும் புரியவில்லை
ஏன் என்று புரியாமல் இருக்க
பதில் கண்டேன்
"காதல் இன்னும் வரவில்லை" என்று.

துணிந்து எழுந்துவிட்டேன்

துணிந்து எழுந்துவிட்டேன் -
போருக்கு அல்ல
அவளிடம் காதலை சொல்ல.
கஜினி முகமது எத்தனை முறை
போருக்கு சென்றான் என்றும் தெரியாது,
நான் துணிந்து எழுவது
எத்தனை முறை என்றும் தெரியாது.
ஒன்று மட்டும் உறுதியாக
சொல்லலாம் - நான்
இன்றும் சொல்லபோவதில்லை.

பின்பு ஏன்?
அவள் அருகில் செல்வேன்
என் சுவாசக்காற்றை எதிர்நோக்கி
காத்திருந்தவள் போல்
என் பக்கம் திரும்புவாள்.

அவள் கண்கள் பார்ப்பேன் - அது
இந்த எதிர்பார்ப்பு பிடித்திருப்பதை சொல்ல.
சொல்லாமல் திரும்புவேன் - அவள்
புரிந்துக்கொண்டால் என்று.

Wednesday, September 1, 2010

கால் - மனது

நடந்து சென்ற நாட்களில்
கால் வலித்தது - மனது அல்ல.
இருசக்கரத்தில் செல்லும் இன்று
காலும் வலிக்கிறது
மனதும்  வலிக்கிறது - ஒவ்வொரு
முறையும்  கால்-மனதுடன்
பெட்ரோல் போடும்பொழுது.

முரண்பாடு

கவிஞன் 1:
                  சமுக அவலங்கள் சாக்கடை அருகில்
                  தோன்றுவதில்லை
                  மாளிகையில் முடிவு செய்யப்படுகின்றன.
கவிஞன்  2:
                  பிறக்கும் உயிர் எங்கு பிறக்கவேண்டும்
                  என்று அந்த
                   உயிர் முடிவு செய்வதில்லை. 

 

எனக்குள்..

 எனக்குள்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
கேட்க தோன்றாத கேள்விகள்

சொல்லபடாத பதில்கள்
முடிவுபெறாத கவிதைகள்

எழுதப்படாத  கதைகள்
ஏங்கித்தவிக்கும் கவிஞன்
நடிக்க துடிக்கும் நடிகன்

இவைகளை அடக்கி ஆளும் மிருகம்.