Pages

Monday, October 11, 2010

நினைவிருக்கும் வரை...

நீ என்பதும்
நான் என்பதும்
நினைக்கும்(நினைவு இருக்கும்)
வரை தான்.

இதயத்தில்...

வெளியில் மழை
உள்ளே கொசு
கடுப்பில் வெளியே வந்தேன்...
எதிர் குடிசையில்
வெளியிலும் மழை
உள்ளேயும் மழை...
இப்போது
கொசு கடித்த இடத்தில்
வலியில்லை -
இதயத்தில்...

வெளியே நான்!!!

கண்களில் உறக்கம்
குறைக்கும் நாய்கள்
விளக்குகள் எரிய
கதவுகள் திறக்க
வெளியே நான்!!!

அதிர்ஷ்டம்???

கன்னத்தில்
குழி விழுந்தால் அதிர்ஷ்டமாம்
என் கன்னத்திலும்
குழி விழுகிறது -
ஆனால் அதிர்ஷ்டம்???

கண்ணீர்..!!

கொளுத்தும் வெயில்
வெட்டிகிடக்கும் மரங்கள்
வெட்டியவன்
நெற்றியில் கண்ணீர்..!!

நீ, நான்!!

நீ
என் அருகில் இருந்தபொழுது
நீ மட்டும் தான் இருந்தாய்...!!
நீ
என்னை விட்டு விலகியதும்
நான் மட்டும் தான் இருக்கிறேன்..!!

புரிந்துகொண்டேன்!!!

கனவுகளை
கைமாற்றி கொண்டேன்
கற்பனைகளை    
திசைமாற செய்தேன்
திறமைகளை
தினம் ஒன்றாய் தேடுகிறேன்
தீதும் நன்றும் பிறர்தர வார
என்பதை உணர்கிறேன்.
சிந்தனை,
சொல், செயல் மூன்றும்
ஒன்றாய் இணைக்க துடிக்கிறேன்.
முடியாது என்பது
முயற்சியின் கல்லறையாகும்
நடக்காது என்பது
நாளையின் கேள்விக்குறி
தெரியாது என்பது
தோல்வியின் வளர்ச்சி - இவைகளை
இப்பொழுதுதான் புரிந்துகொண்டேன்
விழித்துக்கொண்டேன்.

நினைவுகள்

என் இரவுகளை
கவிதையாய் வடிக்கிறேன்
அதில் வார்த்தையாக
உன் நினைவுகள்.