Pages

Sunday, December 12, 2010

சுப்பிரமணிய பாரதி

 சுப்பிரமணிய பாரதி
திசம்பர் 11 - இன்று பாரதியார் பிறந்தநாளாம், எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.  
இவர் யார் - பாரதி யார் என்று கேட்பவர்களுக்கு, மேலே உள்ள படத்தில் இருப்பவர்தான்  பாரதியார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
இவர் என்ன செய்தார் - தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
முக்கியமாக, தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். இன்று தமிழ் பெண்களின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணம் இந்த பாரதி தான், இவர் அன்று பேசிய பெண்ணுரிமை தான் இன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணம். அந்த வகையில் பெண்கள் இவரை தெய்வமாக வணங்கவேண்டும். என் கேள்வி என்னவென்றால்  "எத்தனை பெண்களுக்கு தெரியும் திசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள் என்று?" என்பதே.

தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

3 comments: