Pages

Tuesday, December 21, 2010

சச்சின் தெண்டுல்கர் 50-வது சதம்

           டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்" சச்சின். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்தார் தெண்டுல்கர். 133 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 1985 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 175 டெஸ்ட் ஆடியிருக்கும் தெண்டுல்கர் 50-வது சதத்தை எட்டிய முதல் வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 
         "சாதனையை நோக்கி இவர் செல்வதில்லை, சாதனைகள் இவரை தேடி வருகின்றன" என்றே சொல்லத்தோன்றுகிறது.
         சாதனைகள் இவருக்கு புதிதில்லை,  இருந்தாலும் வயது ஏற ஏற இவரது கணக்கில் சாதனைகளும் ஏறிக்கொண்டே போகிறது. சமீபகாலமாக இவரது விளையாட்டில் மாற்றங்கள் காணமுடிகிறது. இந்த வருடம் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1500 ரன்களை கடந்துவிட்டார். முன்பெல்லாம் 90 ரன்களில் இருந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் பல பந்துகள் செலவிடுவார், ஆனால் தற்பொழுது 90 ரன்னில் இருக்கும்போது சிக்ஸர் எல்லாம் அடிக்கிறார். இந்த மாற்றம் உலக கோப்பைக்கான சோதனை ஓட்டம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ?, தோனி காட்டில் மழைதான்.


        50-வது சதம் குறித்து தெண்டுல்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
எனது சதம் எண்ணிக்கையில் மேலும் ஒன்று உயர்ந்துள்ளது. 50 சதம் என்பது வெறும் எண்ணிக்கைதான். நான் சாதனைக்காக ஒருபோதும் ஆடியது இல்லை. அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது லட்சியமாக இருக்கிறது. 50-வது சதம் அடித்தது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி அடையவில்லை என்று என்னால் கூற இயலாது. ஆனால் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. 50-வது சதத்தோடு நான் நின்று விடமாட்டேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து சதம் அடிப்பேன். நேற்று முன்தினம் எனது தந்தையின் பிறந்தநாள் 50-வது சதத்தை எனது தந்தைக்கு அர்பணிக்கிறேன். 50-வது சதம் அடிப்பதற்காகவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் நான் விலகவில்லை.
 

No comments:

Post a Comment