Pages

Thursday, December 30, 2010

புத்தாண்டு கொண்டாட்டங்களின் வரலாறு

விழாக்களில், பழமையானது, புத்தாண்டு தின விழா. முன்பு, அந்தத்த நாட்டின் பாரம்பரியத்திற்கு ஏற்ப புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் வேறுபட்டன. மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. 
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன், இளவேனிற்காலம் தொடங்கும், மார்ச் மாதம் முதல் தேதியில், பாபிலோனில் உள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டியே, ரோமானியர்கள் மார்ச் ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி விழா எடுத்தனர். அந்த காலக் கட்டத்தில், மார்ச்சை முதல் மாதமாக கொண்டு, ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. தற்போது, 9வது மாதமாக செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது மாதமாக டிசம்பரும் உள்ளன. ஆனால் முன்பு, 7வது மாதமாக செப்டம்பரும், 8வது மாதமாக அக்டோபரும், 9வது மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது.

லத்தீன் மொழியில் "செப்டம்' என்றால் "7', "அக்டோ' என்றால் "8', "நவம்' என்றால் "9', "டிசம்' என்றால் "10' என்றும் பொருள்படும். கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ் ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல் மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி அமைத்தார். அப்போதுதான், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது. என்றாலும், மார்ச் ஒன்றாம் தேதியில் புத்தாண்டை பல காலம் கொண்டாடி வந்தனர். இத்துடன், புத்தாண்டு குறித்த வரலாறு முடிந்து விடவில்லை. பல புதிய காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு முன்பு, நிலவின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. ஜூலியஸ் சீசர் ஆண்ட காலத்தில், சூரியனை மையமாக கொண்டு, ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு பொலிவு ஏற்பட்டது.

1 comment: