Pages

Monday, November 8, 2010

வலைப்பதிவு

         வலைப்பதிவு  - புதியதாக அறிமுகமான திசை என்று கூட சொல்லுவேன், ஏனென்றால் நெடுநாட்களுக்கு பிறகு எனக்கு எழுத்து தமிழை நினைவில் கொண்டு வந்தது. கல்லூரி முடித்த பிறகு எழுதுவது குறைந்துபோனது, அதிலும் தமிழில் எழுதுவது முற்றிலும் மறந்துபோனது. கல்லூரியில் தமிழ் ஒரு படமாய் இல்லை என்றாலும் பெரும்பாலும் என் note பின்பக்கங்களில் கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. சில வருடங்களாக கவிதை எழுதுவது என்னை அறியாமல் மறைந்துபோனது, தமிழ் புத்தகங்கள் என்றில்லை பொதுவாக புத்தகம் படிப்பதில் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. இன்று வரை பள்ளி மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்களை தவிர்த்து நான் படித்த ஒரே ஒரு புத்தகம் வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் மட்டும் தான். இதை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த வலைபதிவுகள் என்னை நிறைய படிக்கவைகிறது, அதிலும் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது என்பதை சொல்லியாகவேண்டும்.
        வலையில் பதிப்பது சற்று சிரமமாகவே உள்ளது, வரிகளாய் யோசித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாக பதிவு செய்வதற்குள் வரிகள் என்னை அறியாமல் மாறிவிடுகிறது, அர்த்தங்களும் தான். மேலே பதித்த 15 வரிகளுக்கு நான் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள், இதே என் கைப்பட எழுதிருந்தால் 5 நிமிடம் ஆகுமா? தெரியவில்லை. ஒருவேளை புதிதாக வலையில் பதிப்பதால் இப்படியோ? இருக்கலாம். என் எழுத்துகள் தொடரும்.... 

1 comment:

  1. Good Machi ... its apt for me too da .. but u have stopped reading தமிழ் books after College but i stop reading after schooling da ...

    any how v will try to write machi..

    ReplyDelete