Pages

Friday, November 12, 2010

கமலின் சோகம்..

           எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எப்படி தன்னம்பிக்கை குறையாமல்  நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் தந்த பதில்:

         சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல் எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை இருக்கும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகி விட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு - பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கிறது. அந்த பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியே பார்க்கக் கூடாது. மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம். தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும் உங்களைப்போல மனிதன்தானே?

3 comments:

  1. அனுபவம் தான் சிறந்த கல்வி....
    தேவைகள் தான் சிறந்த அறிவி....

    கமலின் வாழ்க்கை அனைவருக்கும் ஒரு செய்தியாக அமையும்.....

    ReplyDelete
  2. சிந்தனைச்சிதறல், வழக்கம் போல், கலைஞானியிடம் இருந்து! :)

    ReplyDelete