Pages

Thursday, June 30, 2011

சில பிரிவுகள்

சில பிரிவுகள்
நம்மை சுற்றி உள்ள 
உலகை மறைத்துவிடுகிறது
சில பிரிவுகள்
உலகம் நம்மை மறந்துவிட்டதாய்
நினைக்க தோன்றுகிறது
சில பிரிவுகள்
சிலுவையில் அறையப்படும் 
வலியை தருகிறது
சில பிரிவுகள்
சிந்தனைக்குள் புகுந்து சிரிகிறது
சில பிரிவுகள்
சத்தமில்லாமல் நிகழுந்துவிடுகிறது
சில பிரிவுகள்
இதயத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாக
கவிதையில் சொல்லப்படும் உவமையாக
பகலில் தோன்றிடும் கனவாக
காலையில் நிகழும் நிகழ்வாக
மாலையில் மறைந்திடும்

Wednesday, June 1, 2011

அவள் யார்

ஒவ்வொரு இரவிலும் 
அவளது கனவுகள்
ஒவ்வொரு பகலிலும் 
அவள் யார் என்ற தேடல்கள்
கற்பனைகளை அவளுக்காக சேமிக்கிறேன்
கவிதைகளை அவளுக்கு சமர்பிக்கிறேன்.

அமைதி

அமைதி சொல்லும் அர்த்தங்கள்
ஆயிரம் ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று மட்டும் உண்மை சொல்லும்
கேட்காத வார்த்தை கூட காதில் கேட்கும்
கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும்
ஏன்? எதற்கு? எப்படி?
இப்படி பல எ'களுக்கு விடை தெரியும்
கிடைத்த விடையும் கேள்வியாகும்
பார்த்த முகங்கள் பதிலாய் தோன்றும்
மனதை மூளை வென்றுவிடும்
மனமும் தோல்வியை ஏற்றுகொள்ளும்.

ஓர் உயிராய்

தினம் ஒன்று சொல்லி
கனவுக்குள் தள்ளி
முகம் கூட தெரியாமல்
என்னை கொலை செய்தாய்
நீ இல்லை என்றால்
நான் இல்லை என்றாய்
நான் இங்கு இருக்க
நீ எங்கே போனாய்
புரியாமல் தவிக்கிறேன் நான்
புதருக்குள் கிடக்கிறேன்
புவி உலகில் ஓர் உயிராய்.