Pages

Tuesday, November 30, 2010

கேள்வி-பதில்

பலவற்றை யோசித்து பார்த்தேன்
என் அறிவிற்கு எட்டிய வரை
எந்த ஒரு கேள்விக்கும்
உறுதியான ஒரு பதில் மட்டுமே
இருப்பதாய் எனக்கு தெரியவில்லை
கேட்கப்படும் ஒரு கேள்விக்கு
ஒரு பதில் மட்டுமே இருக்குமானால்
அந்த கேள்வி தவறு என்று சொல்லலாமா?

ஏன்?

விழுந்துவிட்டேன்
எழுவதற்கு கைகள் தேடுகிறேன்
என்னிடம் கைகள் இருந்தும்

ஏன்?

கையில் தெம்பு இல்லையா?
இல்லை.
சோம்பேறித்தனமா?
இல்லை.
மனதில் வலி இருப்பதால்.

ஏன் அவள்??

பஞ்சுமிட்டாய் கலரில்
      இனிக்கவைக்கிறது அவள் புடவை
பார்க்கும்போதே மின்னல் போல்
      மனதை தாக்கியது அவள் கண்கள்
அழகான சிரிப்பொலியில்
     அடிமையாகி போனது என் காதுகள்
காற்றினில் இசையமைக்கும்
     அவள் கை விரல் இடுக்கில்
      சிக்கிகொண்டது என் உயிர்
அவள் நடந்து செல்கையில்
     பின்னால் செல்கிறது மனம்
     அவள் பாதங்கள் பார்த்தபடி 
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும்
     உவமை தேடுகிறேன்
பேசும் வார்த்தைக்கெல்லாம்
     எதுகை மோனை யோசிக்கிறேன்
இருந்தும் அவளை பிடிக்கவில்லை
பலவருடத்திற்கு பிறகு
     என்னை கவிதை எழுதவைத்துவிட்டால்.

Saturday, November 27, 2010

மீண்டும் வரவேற்கிறது

                     கார்த்திக் இறந்து சிலவினாடிகள் தான் ஆகிறது,  அவன்  உயிர்(ஆன்மா) மேலோகம் செல்கிறது, மேலோகம் அடைந்ததும் அது உருவம் பெறுகிறது. வாயிற்படியில் இருவர் பார்க்க கட்டுமஸ்தாக ஒரே போல் உடையில் இருக்கிறார்கள். வருபவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்ற விவரங்கள் பெற்றுக்கொண்டு கொள்ளப்படுகிறது பின்பு  அடையாளமாக அவர்கள் கழுத்தில் ஒரு ரிப்பன் அணியப்படுகிறது, அதில் உள்ள டாலர் போன்ற தகட்டில் 1,2,3,4,5,6,7 அல்லது +1,+2,+3 என்ற குறியீடுகளில் ஏதேனும் ஒன்று பொறிக்கப்படுகிறது. +3 தான் கடைசி  வாய்ப்பு. கார்த்திக்கின் டாலரில் +2 பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் வரவேற்பறையில் அழகான இரண்டு பெண்கள், அவர்கள் அவன் டாலரில் பொறிக்கப்பட்ட குறியீடை பார்த்து வழிசொல்கின்றனர். உள்ளே சென்ற கார்த்திக்கிற்கு  நேர்காணல் நடத்தப்படுகிறது. கார்த்திக் அங்கிருந்து மற்றொரு இடத்திருக்கு அனுப்பப்பட்டான், அங்கு அவனை மூவர் கொண்ட கூழு முன் நிறுத்தப்பட்டு  பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்பு அவன் முக்கியமான அரங்கிற்கு அழைத்துசெல்லப்பட்டான், அங்கு அவன் ஐவர் கூழு முன் நிறுத்தப்பட்டான். அவர்கள் அவனை பல கேள்விகள் கேட்டுவிட்டு "you have to learn more and you need more experience" என்று சொல்லி அனுப்பினார்கள். வெளியே வந்தவன் அந்த டாலரை பார்த்தான், அது சொன்னது "7 ஜென்மம் முடிந்து +2 ஜென்மமும் முடிந்து விட்டது" என்று. 7 ஜென்மம் முடிந்த சிலர் மட்டுமே வெற்றி பெற்றதை காணமுடிந்தது. டாலரை கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் திரும்பி பார்க்கிறான், அங்கு "சொர்க்கம் உங்களை மீண்டும் வரவேற்கிறது" என்று பொறிக்கப்பட்டிருந்தது.

ரசனை!!

மொட்டைமாடி முழுநிலவு
கண்சிமிட்டும் நட்சத்திரம்
முகத்தில் விழும் மழைச்சாரல்
காலைப்பனி  படர்ந்து இருக்க
ஒளிவீசும் சூரியன்
சூடான தேனீர்
வெதுவெதுப்பான வெந்நீர்
வயற்றுக்குள் இறங்க
அவசரப்படாத காலை உணவு
சுமக்க காத்திருக்கும் சுமைதாங்கி
நெரிசல் இல்லா பாதை
அலுக்காத அலுவலகம்
இவ்வளவும் கிடைத்தாலும்
யாருக்கும் சந்தோசம் இல்லை
அதை ரசிப்பதுமில்லை
ரசனை பணம் மீது இருக்கும் வரை......

Thursday, November 25, 2010

தனிமையில் இல்லை!!!

நான் தனிமையில் இருந்ததில்லை
எப்பொழுதும்
என்னுள் அவள் இருப்பதால்
காதலித்த அன்று முதல்
கல்லறையில் இருக்கும்
இன்று வரை!!

Thursday, November 18, 2010

உயிரில் கலந்தது

ஒருமுறை உன்னை பார்க்கவே
என் கண்களும் கேட்குதே,
தினம் தினம் உன்னை
நினைக்கவே என் இதயமும் துடிக்குதே,
சாலை ஓரம் போகும்
பெண்களை பார்க்கும்பொழுது
உந்தன் ஞாபகமே
உயிர் உறைந்து போகிடுமே.
எங்கு உள்ளாய்
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
விடைகள் இல்லையே
அதற்கு விலையுமில்லையே.
வருடம் ஓடிப்போனது
பல முகங்கள் என்முன் நகர்ந்தது
சில முகங்கள் மறந்தும் போனது
உன் முகம் மட்டும் நினைவில் நின்றது
உயிரில் கலந்தது.

Friday, November 12, 2010

கமலின் சோகம்..

           எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எப்படி தன்னம்பிக்கை குறையாமல்  நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் தந்த பதில்:

         சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல் எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை இருக்கும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகி விட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு - பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கிறது. அந்த பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியே பார்க்கக் கூடாது. மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம். தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும் உங்களைப்போல மனிதன்தானே?

ஆச்சரியம்!!

மேகங்கள் சூழ
மழை வருமென்று எதிர்பார்த்தேன்,
ஆனால் என்னவள் வருகிறாள்
மின்னல் போல.

காதல் வலி...!!

அலை அலையாய் ஞாபகங்கள்
உன்னை தேட சொல்லுதடி
மறந்து விடு என்று மூளை சொல்ல
நெஞ்சம் என்னை கிள்ளுதடி
காற்றில் கூட ஜீவன் தேடும்
பூவாய் இன்று மாறினேன்
தோற்று போன குழந்தையை போல
கண்ணீர் கண்ணில் நிற்கிறதே
ஏதோ ஏதோ நடக்கிறதே
எந்தன் உயிர் வாழ்கிறதே....

முழுநிலவு!!

முத்தம் தருமோ முழுநிலவும்
நித்தம் தோன்றும் பார்கையிலே
கைகள் நீட்டி நான் அழைத்தாள்
காலை என்னுடன் தங்கிடுமோ?

Monday, November 8, 2010

வலைப்பதிவு

         வலைப்பதிவு  - புதியதாக அறிமுகமான திசை என்று கூட சொல்லுவேன், ஏனென்றால் நெடுநாட்களுக்கு பிறகு எனக்கு எழுத்து தமிழை நினைவில் கொண்டு வந்தது. கல்லூரி முடித்த பிறகு எழுதுவது குறைந்துபோனது, அதிலும் தமிழில் எழுதுவது முற்றிலும் மறந்துபோனது. கல்லூரியில் தமிழ் ஒரு படமாய் இல்லை என்றாலும் பெரும்பாலும் என் note பின்பக்கங்களில் கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. சில வருடங்களாக கவிதை எழுதுவது என்னை அறியாமல் மறைந்துபோனது, தமிழ் புத்தகங்கள் என்றில்லை பொதுவாக புத்தகம் படிப்பதில் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. இன்று வரை பள்ளி மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்களை தவிர்த்து நான் படித்த ஒரே ஒரு புத்தகம் வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் மட்டும் தான். இதை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த வலைபதிவுகள் என்னை நிறைய படிக்கவைகிறது, அதிலும் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது என்பதை சொல்லியாகவேண்டும்.
        வலையில் பதிப்பது சற்று சிரமமாகவே உள்ளது, வரிகளாய் யோசித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாக பதிவு செய்வதற்குள் வரிகள் என்னை அறியாமல் மாறிவிடுகிறது, அர்த்தங்களும் தான். மேலே பதித்த 15 வரிகளுக்கு நான் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள், இதே என் கைப்பட எழுதிருந்தால் 5 நிமிடம் ஆகுமா? தெரியவில்லை. ஒருவேளை புதிதாக வலையில் பதிப்பதால் இப்படியோ? இருக்கலாம். என் எழுத்துகள் தொடரும்.... 

Saturday, November 6, 2010

ரஜினி சொன்ன குட்டி கதை!!!

     இன்று(5-11-2010) இரவு(9 pm) சன் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பேட்டியில், ரஜினியிடம் குட்டி கதை சொல்லுமாறு கேட்கப்பட்டது. மிகுந்த யோசனைக்கு பின் ரஜினி சொன்ன குட்டி கதை இதோ:
            ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்ப படுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம்  ஆட்சி செய்யமாட்டாங்க.. 1 வருஷம் இல்ல 2 , 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு. போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."
            அதுமாதிரி ஒரு planning வேணும். அதுமாதிரி கலாநிதி சாரும், ஷங்கரும் பிளான் பண்ணி எந்திரன் எடுத்தாங்க.