Pages

Tuesday, December 11, 2012

பாரதி

பாரதத்தின் தீ
எரிந்தப்பொழுது எரிமலையாய்
மடிந்தபொழுதும் அனலாய்
தகதகத்து கொண்டிருக்கிறான்
"சாதிகள் இல்லையடி பாப்பா"
என்ற சாட்டையை வீசி
தன் தலைமுறைக்கு எதிரியாகி
அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டினான்
எம் தமிழுக்கு தலைமகன்
இந்த தரணியில் பிறந்த திருமகன்
இவனை நேரில் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்க மறந்ததில்லை
இவன் போல் எவனும் இல்லை
இவனை விட பெரியோன் எவனுமில்லை

தைரிய தமிழுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 
வாழ்க எம் பாரதி
வாழ்க தமிழ் !!

Tuesday, August 21, 2012

மறக்கிறோம்!!

அடுத்து அடுத்து என தேடிக்கொண்டே போகிறோம்
ஆனால் ஒவ்வொன்றும் கிடைக்கும் பொழுது
ஏதோ ஒன்றை இழந்துவிட்டு போகிறோம்
என்பதை நாம் மறக்கிறோம்.

Monday, August 13, 2012

கடல் மேல் கிடந்தோம் கனவுகளில் வளர்ந்தோம்
காலம் வரும் வரை காத்திருக்க மாட்டோம்.
மொழிகளால் பிரிவோம் முகமூடி அணியோம்
இடர்பாடுகள் வந்தால் இமயத்தை காப்போம்

Saturday, August 11, 2012

சாமி கும்பிடும்போது
தமிழ் வார்த்தைகளை தேடுகிறேன்
தமிழ் கடவுளுக்கு
ஆங்கிலம் தெரியுமா என்ற சந்தேகத்தில்!!

Sunday, August 5, 2012

நண்பர்கள்

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்!!
ஒவ்வொரு வருடமும் நண்பர்கள் தினம் கொண்டாடும் நாட்கள் மாறுகிறது, அந்த மாற்றம் நாட்களில் மட்டும் இருக்கட்டும், நட்பில் வேண்டாம். நண்பன் என்பவன்  நாளை உன் சரித்திரத்தை எழுதும்பொழுது உன் தாய், தந்தை, கடவுள், சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அல்லாமல் தவிர்க்கவே முடியாமல் அதில் இடம்பிடிக்கும் ஒருவனாக இருப்பான். அவன் எப்பொழுதும் உன் அருகில் இருக்கவேண்டும் என்றில்லை, தொடர்பில் இருக்கவேண்டிய அவசியமில்லை, வலைத்தளத்தில் தினமும் தகவல் பரிமாறிக்கொள்ள தேவையுமில்லை, ஆனால் அவன் இல்லாமல் உன் வாழ்க்கையையோ நீ இல்லாமல் அவன் வாழ்க்கையையோ எழுதவோ சொல்லவோ முடியாது. நட்பு என்பது காதலை விட பெரியது, உன் நண்பனிடம் எதை பற்றியும் பேசலாம், ஆனால் உன் காதலியிடமோ மனைவியிடமோ அப்படி பேச முடியுமானால் இத்தனை  விவாகரத்துகளை நம் தேசம் சந்தித்திருக்காது என நினைகிறேன். நட்பு என்பது நீங்கள் இந்த ஸ்டாப்பில் ஏறி அடுத்த ஸ்டாப்பில் இறங்கும் பேருந்து இல்லை, நண்பன் என்பவன் அந்த பேருந்தை ஓட்டும் ஒட்டுனருமில்லை. உங்கள் சுயநலத்திற்கு நட்பு, நண்பன் என்றெல்லாம் கூறி தயவு செய்து நட்பையும், நண்பனையும் இழிவு செய்யாதிர்கள். "நட்பு நம்மில் இருக்கட்டும், நண்பன் நமக்காக இருப்பான்."

Monday, July 30, 2012

நாம எதிர்ப்பாக்கறது எதிர்பார்த்த நேரத்துல நடக்காம போயிடுது
அந்த விஷயம் எதிர்பாக்காத நேரத்துல நடந்தா?? அது தான் விதியா??!!
அப்போ எதிர்ப்பாக்கமா தற்செயலா நடக்கற விஷயம் எல்லாம் விதினா??
தற்செயலான விஷயங்கள் எல்லாம் விதியா??

காத்திருப்பது!!

காத்திருப்பது சுகமே
ஆனால்,
கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டுவிட்டு
மீண்டும் வாய்ப்புகளுக்காக காத்திருப்பது
நரகத்தில் நிற்பதை போன்றது.

Sunday, July 22, 2012

வலி

அவள் போன பாதை அது போலியானது
தேடி போகிறேன் அது காலியானது
இமை மூடும் பொழுது இதயம் வலிக்கின்றது
அவள் எனதில்லை என நினைக்கும் பொழுது
உயிர் உடலை விட்டு உருவி ஓடுகிறது
நிஜம் என்று தெரிந்தும்
கணவாய் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்.

Friday, July 20, 2012

தேவையை பொறுத்தே நாம ஒரு விஷயத்தை கரெக்டா தப்பானு முடிவு பண்றோம்!!

Sunday, July 15, 2012

காத்திருப்பு!!

கற்பனைகளுக்கு உயிர் கொடுக்க
நேரமிருக்கிறது,
ஆனால் காலம் வரவில்லை,
காலத்திற்காக காத்திருக்காதே என்றார்கள்
காத்திருப்பு என் கற்பனையை
காதல் செய்வது தெரியாமல்.

Tuesday, June 12, 2012

தேடலை தொடங்க!!

தேடி தேடி கலைத்தபோது
தென்றலாய் கடந்து
உற்சாகம் தந்து மறைந்து போகிறாள்
மறுபடியும் தேடலை தொடங்க...

Thursday, May 17, 2012

???

நீ காதலிக்கவில்லை என்றால்
உன் திருமணம் கட்டாயமாகும்
நீ காதலித்தால்
உன் திருமணம் காவியமாகும்

Tuesday, May 1, 2012

உழைப்பாளர்கள் தின வாழ்த்துகள்

உழைப்பை மட்டுமே நம்பி உயிர் வாழும்
நல்ல உள்ளங்கள் உள்ள வரை 
உலகில் உண்மை என்ற வார்த்தை உயிர் வாழும்
கடமை காணாமல் போய்விடாது
நேர்மை நிமிர்ந்து நிற்கும்
அந்த உழைப்பை மதிக்க தெரிந்தால்
உலகம் உன்னை போற்றும்
உழைப்பை நம்புங்கள்
உழைப்பாளியை போற்றுங்கள்.
உழைப்பாளர்கள் தின வாழ்த்துகள்.
 
Friday, March 2, 2012

Night Shift!!

இரவுகள் நெடுநேரம் தொடர்கின்றது
பகல்கள் பறந்தோடி போகின்றது
இமைகளை விழி மூட கேட்கின்றது
இமைகளோ முடியாமல் தவிக்கின்றது
உறக்கங்கள் சம்பரதாயம் ஆனது
கனவுகள் காணாமல் போனது
கண் திறக்கும் நேரம் காலையும் இல்லை
கண் உறங்கும் நேரம் இரவும் இல்லை
நேற்றா இன்றா நாளையா
எதுவும் புரியவில்லை
பாதி உலகில் பாதங்கள் இருக்க
மீதி உலகில்  மிச்சமாய்
இயந்திரம் போல் சுழல்கின்றோம்
காரணங்கள் தெரியவில்லை
கற்பனைகள் தோன்றவில்லை

 

Saturday, February 18, 2012

அடுத்து என்ன??

பல மாதம் பார்க்கவில்லை

பல நொடிகள் நினைத்ததில்லை

ஒரு பொழுதும் ஏங்கியதில்லை

எனக்கென்று எண்ணியதில்லை

என்றோ ஒரு நாள் பார்க்கிறேன்

அன்றே வாழ துடிக்கிறேன்

இவளா என்று நினைக்கிறன்

அடுத்து என்ன என்று கேட்கிறேன்

முழுவதுமாய்

என் கற்பனைகள் தோற்றுபோகிறது
அவளை நேரில் பார்க்கும்பொழுது
என் உலகினில் யாருமில்லை
அவள் என்னை பார்த்தபோது
எந்த இசையும் கேட்கவில்லை
எந்த பாடலும் ஒலிக்கவில்லை
வார்த்தைகள் தோன்றவில்லை
முழுவதுமாய் ஆட்கொண்டால்
 மூளையையும் சேர்த்து
  

Sunday, February 12, 2012

காதலர் தினம்

காதலை கொண்டாட எதற்கு தினம்
வேண்டும் ஒரு யுகம்.

Saturday, February 11, 2012

எது?

என் வானிலே ஓர் வெண்ணிலா
என்னக்காகவே தினம்(பகலில்)  வருகிறாள்(தோன்றினால்)
பூ பூத்திடும் ஓர் காலையில்
புல்லாங்குழல் இசை கேட்குதே
நடைபாதை நகர்கின்றது
நான் மட்டுமே சிலை ஆகிறேன்
அவள் பேசும் ஒலி கேட்கின்றது
வார்த்தைகளும் விலகி போகுதே
புதிதானது புதிரானது 
புரியாமலே புவியானது
எது என்னது எது உன்னது
என தெரியாமலே இடம் சேர்ந்தது

Tuesday, February 7, 2012

தமிழ் சிறப்பு

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் 


அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்தல்