Pages

Thursday, December 30, 2010

புத்தாண்டு கொண்டாட்டங்களின் வரலாறு

விழாக்களில், பழமையானது, புத்தாண்டு தின விழா. முன்பு, அந்தத்த நாட்டின் பாரம்பரியத்திற்கு ஏற்ப புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் வேறுபட்டன. மெசபடோமியாவில் தான், முதன் முதலில் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது என்று கூறப்படுகிறது. 
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன், இளவேனிற்காலம் தொடங்கும், மார்ச் மாதம் முதல் தேதியில், பாபிலோனில் உள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடினர். இதையொட்டியே, ரோமானியர்கள் மார்ச் ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்க நாளாக கருதி விழா எடுத்தனர். அந்த காலக் கட்டத்தில், மார்ச்சை முதல் மாதமாக கொண்டு, ஒரு ஆண்டுக்கு, 10 மாதங்கள் இருந்தன. தற்போது, 9வது மாதமாக செப்டம்பரும், 10வது மாதமாக அக்டோபரும், 11வது மாதமாக நவம்பரும், 12வது மாதமாக டிசம்பரும் உள்ளன. ஆனால் முன்பு, 7வது மாதமாக செப்டம்பரும், 8வது மாதமாக அக்டோபரும், 9வது மாதமாக நவம்பரும், 10வது மாதமாக டிசம்பரும் இருந்தது.

லத்தீன் மொழியில் "செப்டம்' என்றால் "7', "அக்டோ' என்றால் "8', "நவம்' என்றால் "9', "டிசம்' என்றால் "10' என்றும் பொருள்படும். கி.மு.153ம் ஆண்டில், ரோமாபுரியை ஆட்சி செய்த இரண்டாவது ரோமானிய அரசன் நுமா பொன்டிலிஸ் ரோமன் காலண்டரில், ஜனவரியை முதல் மாதமாகவும், பிப்ரவரியை இரண்டாவது மாதமாகவும் திருத்தி அமைத்தார். அப்போதுதான், ஜனவரி ஒன்றாம் தேதிக்கு, புத்தாண்டு இடம் பெயர்ந்தது. என்றாலும், மார்ச் ஒன்றாம் தேதியில் புத்தாண்டை பல காலம் கொண்டாடி வந்தனர். இத்துடன், புத்தாண்டு குறித்த வரலாறு முடிந்து விடவில்லை. பல புதிய காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. இதற்கு முன்பு, நிலவின் சுழற்சியை அடிப்படையாக கொண்டு காலண்டர்கள் உருவாக்கப்பட்டன. ஜூலியஸ் சீசர் ஆண்ட காலத்தில், சூரியனை மையமாக கொண்டு, ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இயேசு கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு பொலிவு ஏற்பட்டது.

Wednesday, December 29, 2010

எண்ணங்கள்

எண்ணங்களை எழுதி வைப்பதுமில்லை
எண்ணங்களை கணக்கிடுவதுமில்லை
எண்ணங்கள் எண்ணிலடங்காதவை என்பதால்.

இதயம் - மூளை

இரண்டு கைகள் - என்ன செய்ய முடியும்
சாப்பிட முடியுமா
ஒரு பொருளை நகர்த்த முடியுமா
கை குலுக்க முடியுமா
கட்டியணைக்க முடியுமா
பூவைதான் பறிக்க முடியுமா
முடியாது - ஏன் முடியாது?
கைகள் உடலின் ஒரு அங்கம் தான்
அதை இயக்குவது மூளை தான்.
மூளை - சிந்திப்பதற்கு.
இதயம்?
இதயம் சிந்தித்துவிட்டால்
"மூளைச்சாவு" என்பது என்ன?
மூளை - சிந்திப்பதற்கும், செயல்படுத்துவதற்கும்.
இதயம் - உயிர்.

ராகுல் திராவிட் 200Tuesday, December 21, 2010

சச்சின் தெண்டுல்கர் 50-வது சதம்

           டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார் இந்தியாவின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்" சச்சின். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்தார் தெண்டுல்கர். 133 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 1985 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 175 டெஸ்ட் ஆடியிருக்கும் தெண்டுல்கர் 50-வது சதத்தை எட்டிய முதல் வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். 
         "சாதனையை நோக்கி இவர் செல்வதில்லை, சாதனைகள் இவரை தேடி வருகின்றன" என்றே சொல்லத்தோன்றுகிறது.
         சாதனைகள் இவருக்கு புதிதில்லை,  இருந்தாலும் வயது ஏற ஏற இவரது கணக்கில் சாதனைகளும் ஏறிக்கொண்டே போகிறது. சமீபகாலமாக இவரது விளையாட்டில் மாற்றங்கள் காணமுடிகிறது. இந்த வருடம் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1500 ரன்களை கடந்துவிட்டார். முன்பெல்லாம் 90 ரன்களில் இருந்து 100 ரன்கள் எடுப்பதற்குள் பல பந்துகள் செலவிடுவார், ஆனால் தற்பொழுது 90 ரன்னில் இருக்கும்போது சிக்ஸர் எல்லாம் அடிக்கிறார். இந்த மாற்றம் உலக கோப்பைக்கான சோதனை ஓட்டம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ?, தோனி காட்டில் மழைதான்.


        50-வது சதம் குறித்து தெண்டுல்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
எனது சதம் எண்ணிக்கையில் மேலும் ஒன்று உயர்ந்துள்ளது. 50 சதம் என்பது வெறும் எண்ணிக்கைதான். நான் சாதனைக்காக ஒருபோதும் ஆடியது இல்லை. அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுதான் எனது லட்சியமாக இருக்கிறது. 50-வது சதம் அடித்தது மகிழ்ச்சிதான். மகிழ்ச்சி அடையவில்லை என்று என்னால் கூற இயலாது. ஆனால் எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்பதுதான் உண்மை. எனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. 50-வது சதத்தோடு நான் நின்று விடமாட்டேன். எதிர்காலத்திலும் தொடர்ந்து சதம் அடிப்பேன். நேற்று முன்தினம் எனது தந்தையின் பிறந்தநாள் 50-வது சதத்தை எனது தந்தைக்கு அர்பணிக்கிறேன். 50-வது சதம் அடிப்பதற்காகவே நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் நான் விலகவில்லை.
 

Monday, December 20, 2010

சென்னை சர்வதேச திரைப்பட விழா

      எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் திசம்பர் 15-ம் தேதி தொடங்கியது.  இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கிவைத்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லாண்ட்ஸ், பிலிம் சேம்பர் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதம் நடைபெறுகிறது. 
    அனைத்துப் படங்களையும் பார்ப்பதற்கு சிறப்பு நுழைவுச் சீட்டு  ரூபாய் 500 விலையில் கொடுக்கபடுகிறது. பல வெளிநாட்டு படங்களை பார்க்க நமக்கு இது ஒரு அரியவாய்ப்பு. பயன்படுத்தி கொள்ளுங்கள்.
    மேலும் விவரங்களுக்கு : http://www.chennaifilmfest.com/
    கால அட்டவணை : திசம்பர் 15 - 19 வரை முடிந்துவிட்டதால், 20 ஆம் தேதி முதலான அட்டவணைக்கு : http://www.chennaifilmfest.com/schedule1.pdf

Friday, December 17, 2010

Watch the sun’s great explosions

A solar filament that had been lurking atop the sun for a week finally exploded this month, the latest in a string of large solar explosions that NASA scientists say will peak in 2013. This explosion, seen below, released high-energy plasma into the solar system, but did not create auroras on Earth because it dispersed before reaching our atmosphere.

Watch video of the filament explosion:


NASA's Solar Dynamics Observatory captured the image sequence, which shows the filament exploding. In August, NASA scientists observed a 28-hour period of shock waves, solar flare explosions and solar "tsunamis" that rocked the sun.
Scientists say the activity is a sign that the sun is "waking up" and heading for another "solar maximum" cycle in 2013, according to Space.com.

Monday, December 13, 2010

சச்சினுக்கு "டைம்ஸ்" கவுரவம்

        பிரபல "டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் "டாப்-10' சிறந்த விளையாட்டு தருணங்களில் சச்சினின் 200 ரன் சாதனை இடம் பெற்றுள்ளது.  

கடந்த பிப்., 24ம் தேதி குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார். இதற்கு முன் பாகிஸ்தானின் அன்வர்(எதிர் இந்தியா, 1997) மற்றும் ஜிம்பாப்வேயின் கவன்ட்ரி(எதிர் வங்கதேசம், 2009) ஆகியோர் அதிகபட்சமாக 194 ரன்கள் எடுத்திருந்தனர். 


       சச்சினின் இந்த சாதனையை லண்டனில் இருந்து வெளியாகும் "டைம்ஸ்' பத்திரிகை வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த ஆண்டின் "டாப்-10' சிறந்த விளையாட்டு தருணங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது. இது குறித்து இப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:
      விளையாட்டு அரங்கில் சில மைல்கல்லை எட்டவே முடியாது. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரே இன்னிங்சில் யாராலும் 200 ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கு சச்சின் முற்றுப்புள்ளி வைத்தார். கடந்த பிப்ரவரியில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மந்திர இலக்கான 200 ரன்களை அடித்து சாதனை படைத்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 25 பவுண்டரிகள் அடங்கும்.
இப்போட்டியில் சச்சின் 199 ரன்களை தொட்ட போது, ஒரு வரலாற்று சாதனையை சந்திக்கப் போகும் உற்சாகத்தில் உள்ளூர் குவாலியர் ரசிகர்கள் காணப்பட்டனர். கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பரித்தனர். அந்த நேரத்தில் ஒரு ரன்னை தட்டி விட்டு ஓடிய சச்சின், சாதனை மைல்கல்லை சுலபமாக எட்டினார். இது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

வைர வரிகள்!!

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி
     - பாரதி.

பாரதியாரின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை. 

Sunday, December 12, 2010

சுப்பிரமணிய பாரதி

 சுப்பிரமணிய பாரதி
திசம்பர் 11 - இன்று பாரதியார் பிறந்தநாளாம், எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.  
இவர் யார் - பாரதி யார் என்று கேட்பவர்களுக்கு, மேலே உள்ள படத்தில் இருப்பவர்தான்  பாரதியார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
இவர் என்ன செய்தார் - தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது.
முக்கியமாக, தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். இன்று தமிழ் பெண்களின் சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் காரணம் இந்த பாரதி தான், இவர் அன்று பேசிய பெண்ணுரிமை தான் இன்று பெண்களின் முன்னேற்றத்திற்கு காரணம். அந்த வகையில் பெண்கள் இவரை தெய்வமாக வணங்கவேண்டும். என் கேள்வி என்னவென்றால்  "எத்தனை பெண்களுக்கு தெரியும் திசம்பர் 11 பாரதியார் பிறந்தநாள் என்று?" என்பதே.

தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

Thursday, December 9, 2010

ஆல் இன் ஆல் அழகுராஜா, செந்தில், இம்சை அரசன்...

இம்சை அரசன்: யார் அங்கே?? யாரடா அங்கே?????
                              கொண்டு வாருங்கள் அந்த மூக்கு பொடியை.
                              உன் ஒருவனுக்கு மட்டும் தான் மூக்கு போடி தண்டனை, இனி மாட்டும்  அனைவர்க்கும் மிளகாய் போடி தண்டனை.
ஆல் இன் ஆல் அழகுராஜா: stop it... என்னடா இது.. சீ நாயே அவன அவுத்துவிடு.. யாரா இவன்..
இம்சை அரசன்: 2G spectrum ஊழல் செய்தவன் இவன் தான்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: யாரு.. இவன்.. ஹஹஅஹா... டேய் அவன் மூஞ்சிய பாத்தியா... இவன் சின்ன பையன்டா...
இம்சை அரசன்: ஐயோ நான் சொல்வதை நம்புங்கள், ஆதாரம் கிடைத்துவிட்டது.
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் நெசமாத்தான் சொல்றியா?
இம்சை அரசன்: ஆமாம் என்னை நம்புங்கள்.
ஆல் இன் ஆல் அழகுராஜா: எவ்ளோ பணம் டா?
இம்சை அரசன்: 1,76,000 கோடி....
ஆல் இன் ஆல் அழகுராஜா: என்னது... கோடியா? அதுவும் லட்சம் கோடியா?
இம்சை அரசன்: அதற்கும் மேல்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: ஐயோ யம்மா தல சுத்துதே.. இத நா deal பண்றேன்..
இம்சை அரசன்: சொல்லுங்கள்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா இருக்கற ஊர்ல ஊழலா... அதுக்கு தான் நா இருக்கேனே..
இம்சை அரசன்: அதற்கு தான் இவனுக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் கொசு மண்டையா, இதெல்லாம்  ஒரு தண்டனையாடா..
ஆல் இன் ஆல் அழகுராஜா: எப்படி  பட்ட wheel'ku எப்படி bend எடுக்கணும்னு இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா'க்கு தான் டா தெரியும், இப்போ எடுக்குறேன் பாரு bend'a...
ஆல் இன் ஆல் அழகுராஜா: sir sir, இந்த நாய்ங்ககிட்ட 1 ஒரு ரூபா கூட ஏமாத்த முடியல.. நீங்க எப்படி சார் இவளோ பெருசா அடிச்சிங்க? அந்த டகால்டி வேலைய எனக்கும் சொல்லுங்களேன்..
செந்தில்: அண்ணே..
ஆல் இன் ஆல் அழகுராஜா: who is the dog voice?? யார்டா குறுக்க பேசுறது..
செந்தில்: நான் தான் அண்ணே... யார்னே இது?
ஆல் இன் ஆல் அழகுராஜா: டேய் பேரிக்கா மண்டையா, 2G spectrum தெரியுமா உனக்கு?
செந்தில்: (முழிக்கிறார்).
ஆல் இன் ஆல் அழகுராஜா: உன்னக்கு எங்க தெரிய போகுது, நீ தான் மனுசனே இல்லையே...
இம்சை அரசன்: இவனுக்கு என்ன தண்டனை வழங்கலாம்?
செந்தில்: அண்ணே நீங்க சொல்லுகனே..
ஆல் இன் ஆல் அழகுராஜா: யாரு நானு... இவன அப்படியே விடுங்க, election வர போகுது, ஒட்டு கேக்க வரப்ப 100, 200 கொடுப்பான் வாங்கிட்டு ஒட்டு போடுங்க..
கூட்டதிலிருந்து: நாங்க எல்லாம் படிச்சவங்க... பணம் வாங்கிட்டு ஒட்டு போடமாட்டோம்..
ஆல் இன் ஆல் அழகுராஜா: அயயயையோ யாரா அவன்.. இவரு IAS, அவரு IPS'su, டேய் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா, படிச்சவங்க பாதி பேருக்கு vote'a கிடையாது... இந்த voter id இருக்கே அதுவே பாதி பேர்கிட்ட இல்ல. அப்படியே vote'tu இருக்கறவனும் போடமாட்டன்.
செந்தில்: ஏன்னே?????
ஆல் இன் ஆல் அழகுராஜா: ஏனா அவங்கெல்லாம் ஒரே busy டா கோமுட்டி தலையா.. ஹஹஅஹஹா...

Wednesday, December 8, 2010

அதுவும் நிஜமா!!

தூக்கம் கலைந்தபின்
    கனவும் வருமோ?
நீ எதிரில் நின்றால்
    அதுவும் நிஜமா!!
தோற்று போனபின்
    வெற்றி எனதா?
 உன் ஆறுதலில்
    அதுவும் நிஜமா!!
போகும் பாதை எல்லாம்
    உந்தன் நிழலா?
நீ என்னுள் இருப்பதால்
   அதுவும் நிஜமா!!
தேடினால் கிடைக்கும்
    புதையல் உண்டோ?
உன்னக்குள் தேடி இருந்தால்
   அதுவும் நிஜமா!!

Monday, December 6, 2010

மழையே போதும்...

மழையே போதும்
எவ்வளவு நாட்கள் நீ பெய்தாலும்
  வெயில் கால வறட்சி எப்போதும் உண்டு.
எங்கள் மக்களுக்கு சேமிக்க தெரிந்தது
  ஒன்றே ஒன்று தான் - அது
   பணம் மட்டும் தான்.
ஒரு ரகசியம் உனக்கு தெரியுமா?
அவனவன் தாகம் தீர்க்க
  பணம் கொடுத்து வாங்குகிறான் தண்ணீரை
  அவனுக்கு சொந்தமானது என்று கூட தெரியாமல்.
நாங்கள் உன்னை சேர்ப்பதும்,
  சேமிப்பதும் கடலில் மட்டும் தான்
   விடுமுறை நாட்களில் குதுகலிக்க..
திருடர்கள்(அரசியல்வாதிகள்) பலர் காத்திருகிறார்கள்
  மழைக்கால நிவாரண நிதியை திருட..
   சாலை சீரமைப்பு பணிக்கான நிதியை திருட..
அதனால் போதும் - அவர்கள்
  காட்டில் மழை வேண்டாம்.

Tuesday, November 30, 2010

கேள்வி-பதில்

பலவற்றை யோசித்து பார்த்தேன்
என் அறிவிற்கு எட்டிய வரை
எந்த ஒரு கேள்விக்கும்
உறுதியான ஒரு பதில் மட்டுமே
இருப்பதாய் எனக்கு தெரியவில்லை
கேட்கப்படும் ஒரு கேள்விக்கு
ஒரு பதில் மட்டுமே இருக்குமானால்
அந்த கேள்வி தவறு என்று சொல்லலாமா?

ஏன்?

விழுந்துவிட்டேன்
எழுவதற்கு கைகள் தேடுகிறேன்
என்னிடம் கைகள் இருந்தும்

ஏன்?

கையில் தெம்பு இல்லையா?
இல்லை.
சோம்பேறித்தனமா?
இல்லை.
மனதில் வலி இருப்பதால்.

ஏன் அவள்??

பஞ்சுமிட்டாய் கலரில்
      இனிக்கவைக்கிறது அவள் புடவை
பார்க்கும்போதே மின்னல் போல்
      மனதை தாக்கியது அவள் கண்கள்
அழகான சிரிப்பொலியில்
     அடிமையாகி போனது என் காதுகள்
காற்றினில் இசையமைக்கும்
     அவள் கை விரல் இடுக்கில்
      சிக்கிகொண்டது என் உயிர்
அவள் நடந்து செல்கையில்
     பின்னால் செல்கிறது மனம்
     அவள் பாதங்கள் பார்த்தபடி 
அவளின் ஒவ்வொரு அசைவிற்கும்
     உவமை தேடுகிறேன்
பேசும் வார்த்தைக்கெல்லாம்
     எதுகை மோனை யோசிக்கிறேன்
இருந்தும் அவளை பிடிக்கவில்லை
பலவருடத்திற்கு பிறகு
     என்னை கவிதை எழுதவைத்துவிட்டால்.

Saturday, November 27, 2010

மீண்டும் வரவேற்கிறது

                     கார்த்திக் இறந்து சிலவினாடிகள் தான் ஆகிறது,  அவன்  உயிர்(ஆன்மா) மேலோகம் செல்கிறது, மேலோகம் அடைந்ததும் அது உருவம் பெறுகிறது. வாயிற்படியில் இருவர் பார்க்க கட்டுமஸ்தாக ஒரே போல் உடையில் இருக்கிறார்கள். வருபவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்ற விவரங்கள் பெற்றுக்கொண்டு கொள்ளப்படுகிறது பின்பு  அடையாளமாக அவர்கள் கழுத்தில் ஒரு ரிப்பன் அணியப்படுகிறது, அதில் உள்ள டாலர் போன்ற தகட்டில் 1,2,3,4,5,6,7 அல்லது +1,+2,+3 என்ற குறியீடுகளில் ஏதேனும் ஒன்று பொறிக்கப்படுகிறது. +3 தான் கடைசி  வாய்ப்பு. கார்த்திக்கின் டாலரில் +2 பொறிக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றால் வரவேற்பறையில் அழகான இரண்டு பெண்கள், அவர்கள் அவன் டாலரில் பொறிக்கப்பட்ட குறியீடை பார்த்து வழிசொல்கின்றனர். உள்ளே சென்ற கார்த்திக்கிற்கு  நேர்காணல் நடத்தப்படுகிறது. கார்த்திக் அங்கிருந்து மற்றொரு இடத்திருக்கு அனுப்பப்பட்டான், அங்கு அவனை மூவர் கொண்ட கூழு முன் நிறுத்தப்பட்டு  பல கேள்விகள் கேட்கப்பட்டது. பின்பு அவன் முக்கியமான அரங்கிற்கு அழைத்துசெல்லப்பட்டான், அங்கு அவன் ஐவர் கூழு முன் நிறுத்தப்பட்டான். அவர்கள் அவனை பல கேள்விகள் கேட்டுவிட்டு "you have to learn more and you need more experience" என்று சொல்லி அனுப்பினார்கள். வெளியே வந்தவன் அந்த டாலரை பார்த்தான், அது சொன்னது "7 ஜென்மம் முடிந்து +2 ஜென்மமும் முடிந்து விட்டது" என்று. 7 ஜென்மம் முடிந்த சிலர் மட்டுமே வெற்றி பெற்றதை காணமுடிந்தது. டாலரை கொடுத்துவிட்டு வெளியே வந்தவன் திரும்பி பார்க்கிறான், அங்கு "சொர்க்கம் உங்களை மீண்டும் வரவேற்கிறது" என்று பொறிக்கப்பட்டிருந்தது.

ரசனை!!

மொட்டைமாடி முழுநிலவு
கண்சிமிட்டும் நட்சத்திரம்
முகத்தில் விழும் மழைச்சாரல்
காலைப்பனி  படர்ந்து இருக்க
ஒளிவீசும் சூரியன்
சூடான தேனீர்
வெதுவெதுப்பான வெந்நீர்
வயற்றுக்குள் இறங்க
அவசரப்படாத காலை உணவு
சுமக்க காத்திருக்கும் சுமைதாங்கி
நெரிசல் இல்லா பாதை
அலுக்காத அலுவலகம்
இவ்வளவும் கிடைத்தாலும்
யாருக்கும் சந்தோசம் இல்லை
அதை ரசிப்பதுமில்லை
ரசனை பணம் மீது இருக்கும் வரை......

Thursday, November 25, 2010

தனிமையில் இல்லை!!!

நான் தனிமையில் இருந்ததில்லை
எப்பொழுதும்
என்னுள் அவள் இருப்பதால்
காதலித்த அன்று முதல்
கல்லறையில் இருக்கும்
இன்று வரை!!

Thursday, November 18, 2010

உயிரில் கலந்தது

ஒருமுறை உன்னை பார்க்கவே
என் கண்களும் கேட்குதே,
தினம் தினம் உன்னை
நினைக்கவே என் இதயமும் துடிக்குதே,
சாலை ஓரம் போகும்
பெண்களை பார்க்கும்பொழுது
உந்தன் ஞாபகமே
உயிர் உறைந்து போகிடுமே.
எங்கு உள்ளாய்
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
விடைகள் இல்லையே
அதற்கு விலையுமில்லையே.
வருடம் ஓடிப்போனது
பல முகங்கள் என்முன் நகர்ந்தது
சில முகங்கள் மறந்தும் போனது
உன் முகம் மட்டும் நினைவில் நின்றது
உயிரில் கலந்தது.

Friday, November 12, 2010

கமலின் சோகம்..

           எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் வந்தாலும் எப்படி தன்னம்பிக்கை குறையாமல்  நிற்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் தந்த பதில்:

         சொந்த வாழ்க்கையில் எனக்கும் சோகம் இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல் எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தேவை இருக்கிறது. தேவை இருக்கும்போது அழுகை வரும். தேவை பூர்த்தியாகி விட்டால் அழுகை வராது. எல்லோர் வாழ்க்கையிலும் மேடு - பள்ளம் இருக்கின்றது. எனக்கும் இருக்காதா என்ன? என்னுடைய சொந்த வாழ்க்கையின் சோகங்களை வெளியே சொல்லத் தேவையில்லை. என் வீட்டு டாய்லெட், பாத்ரூம் வெளியே தெரிய வேண்டாம். அதற்கு கதவு இருக்கிறது. அந்த பக்கமாக பார்க்க முயற்சிக்காதீர்கள். கதவு மூடி இருந்தால் சாவி துவாரத்தின் வழியே பார்க்கக் கூடாது. மீறி பார்த்தால் உங்களுக்குத்தான் அவமானம். தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லோரையும்போல எனக்கென்று அழுவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நானும் உங்களைப்போல மனிதன்தானே?

ஆச்சரியம்!!

மேகங்கள் சூழ
மழை வருமென்று எதிர்பார்த்தேன்,
ஆனால் என்னவள் வருகிறாள்
மின்னல் போல.

காதல் வலி...!!

அலை அலையாய் ஞாபகங்கள்
உன்னை தேட சொல்லுதடி
மறந்து விடு என்று மூளை சொல்ல
நெஞ்சம் என்னை கிள்ளுதடி
காற்றில் கூட ஜீவன் தேடும்
பூவாய் இன்று மாறினேன்
தோற்று போன குழந்தையை போல
கண்ணீர் கண்ணில் நிற்கிறதே
ஏதோ ஏதோ நடக்கிறதே
எந்தன் உயிர் வாழ்கிறதே....

முழுநிலவு!!

முத்தம் தருமோ முழுநிலவும்
நித்தம் தோன்றும் பார்கையிலே
கைகள் நீட்டி நான் அழைத்தாள்
காலை என்னுடன் தங்கிடுமோ?

Monday, November 8, 2010

வலைப்பதிவு

         வலைப்பதிவு  - புதியதாக அறிமுகமான திசை என்று கூட சொல்லுவேன், ஏனென்றால் நெடுநாட்களுக்கு பிறகு எனக்கு எழுத்து தமிழை நினைவில் கொண்டு வந்தது. கல்லூரி முடித்த பிறகு எழுதுவது குறைந்துபோனது, அதிலும் தமிழில் எழுதுவது முற்றிலும் மறந்துபோனது. கல்லூரியில் தமிழ் ஒரு படமாய் இல்லை என்றாலும் பெரும்பாலும் என் note பின்பக்கங்களில் கவிதை எழுதும் பழக்கம் இருந்தது. சில வருடங்களாக கவிதை எழுதுவது என்னை அறியாமல் மறைந்துபோனது, தமிழ் புத்தகங்கள் என்றில்லை பொதுவாக புத்தகம் படிப்பதில் அவ்வளவு நாட்டம் இருந்ததில்லை. இன்று வரை பள்ளி மற்றும் பொழுதுபோக்கு புத்தகங்களை தவிர்த்து நான் படித்த ஒரே ஒரு புத்தகம் வைரமுத்துவின் கள்ளிகாட்டு இதிகாசம் மட்டும் தான். இதை எல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இந்த வலைபதிவுகள் என்னை நிறைய படிக்கவைகிறது, அதிலும் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது என்பதை சொல்லியாகவேண்டும்.
        வலையில் பதிப்பது சற்று சிரமமாகவே உள்ளது, வரிகளாய் யோசித்து வார்த்தைகளை ஒவ்வொன்றாக பதிவு செய்வதற்குள் வரிகள் என்னை அறியாமல் மாறிவிடுகிறது, அர்த்தங்களும் தான். மேலே பதித்த 15 வரிகளுக்கு நான் எடுத்து கொண்ட நேரம் 30 நிமிடங்கள், இதே என் கைப்பட எழுதிருந்தால் 5 நிமிடம் ஆகுமா? தெரியவில்லை. ஒருவேளை புதிதாக வலையில் பதிப்பதால் இப்படியோ? இருக்கலாம். என் எழுத்துகள் தொடரும்.... 

Saturday, November 6, 2010

ரஜினி சொன்ன குட்டி கதை!!!

     இன்று(5-11-2010) இரவு(9 pm) சன் டிவியில் ஒளிபரப்பான ரஜினியின் பேட்டியில், ரஜினியிடம் குட்டி கதை சொல்லுமாறு கேட்கப்பட்டது. மிகுந்த யோசனைக்கு பின் ரஜினி சொன்ன குட்டி கதை இதோ:
            ஒரு ஊர், அங்கு ராஜா 5 வருஷம் தான் ஆட்சி செய்யமுடியும், 5 வருஷம் முடிந்தவுடன் அவர் காட்டுக்கு அனுப்ப படுவார், அங்குவுள்ள மிருகங்களுக்கு இறையாக நேரிடும். அதனால் யாரும் 5 வருஷம்  ஆட்சி செய்யமாட்டாங்க.. 1 வருஷம் இல்ல 2 , 3 வருஷத்துல காட்டுக்கு போகணும்னு நினைச்சி உடம்பு சரியில்லாம இறந்துடுவாங்க. ஒருத்தர் மட்டும் சந்தோஷமா 5 வருஷம் ஆட்சி செஞ்சாரு, 5 வருஷம் முடிஞ்சிடுச்சி, இப்போ அவரு காட்டுக்கு போகணும், எல்லாரும் ராஜாவை வழியனுப்ப வந்திருந்தாங்க, அப்போ அந்த ராஜா "என்னை ராஜா மாதிரியே அந்த காட்டுல விட்டுடுங்கன்னு" சொன்னாரு. போகும் வழியில் ஒருத்தர் ராஜாவை பார்த்து நீங்க மட்டும் எப்டி சந்தோஷமா இருகிங்கனு கேட்டாரு. அதற்கு ராஜா "நான் ஆட்சி செஞ்ச முதல் வருஷம் என் படையை அனுப்பி அந்த காட்டுல இருந்த கொடிய மிருகங்களை எல்லாம் கொன்றுவிட்டேன். இரண்டாவது வருஷம் அந்த காட்டுல ஒரு அரண்மனை கட்டிட்டேன். இப்போ அங்க ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிட்டேன். இப்போ நான் தான் அங்க ராஜா."
            அதுமாதிரி ஒரு planning வேணும். அதுமாதிரி கலாநிதி சாரும், ஷங்கரும் பிளான் பண்ணி எந்திரன் எடுத்தாங்க.

Monday, October 11, 2010

நினைவிருக்கும் வரை...

நீ என்பதும்
நான் என்பதும்
நினைக்கும்(நினைவு இருக்கும்)
வரை தான்.

இதயத்தில்...

வெளியில் மழை
உள்ளே கொசு
கடுப்பில் வெளியே வந்தேன்...
எதிர் குடிசையில்
வெளியிலும் மழை
உள்ளேயும் மழை...
இப்போது
கொசு கடித்த இடத்தில்
வலியில்லை -
இதயத்தில்...

வெளியே நான்!!!

கண்களில் உறக்கம்
குறைக்கும் நாய்கள்
விளக்குகள் எரிய
கதவுகள் திறக்க
வெளியே நான்!!!

அதிர்ஷ்டம்???

கன்னத்தில்
குழி விழுந்தால் அதிர்ஷ்டமாம்
என் கன்னத்திலும்
குழி விழுகிறது -
ஆனால் அதிர்ஷ்டம்???

கண்ணீர்..!!

கொளுத்தும் வெயில்
வெட்டிகிடக்கும் மரங்கள்
வெட்டியவன்
நெற்றியில் கண்ணீர்..!!

நீ, நான்!!

நீ
என் அருகில் இருந்தபொழுது
நீ மட்டும் தான் இருந்தாய்...!!
நீ
என்னை விட்டு விலகியதும்
நான் மட்டும் தான் இருக்கிறேன்..!!

புரிந்துகொண்டேன்!!!

கனவுகளை
கைமாற்றி கொண்டேன்
கற்பனைகளை    
திசைமாற செய்தேன்
திறமைகளை
தினம் ஒன்றாய் தேடுகிறேன்
தீதும் நன்றும் பிறர்தர வார
என்பதை உணர்கிறேன்.
சிந்தனை,
சொல், செயல் மூன்றும்
ஒன்றாய் இணைக்க துடிக்கிறேன்.
முடியாது என்பது
முயற்சியின் கல்லறையாகும்
நடக்காது என்பது
நாளையின் கேள்விக்குறி
தெரியாது என்பது
தோல்வியின் வளர்ச்சி - இவைகளை
இப்பொழுதுதான் புரிந்துகொண்டேன்
விழித்துக்கொண்டேன்.

நினைவுகள்

என் இரவுகளை
கவிதையாய் வடிக்கிறேன்
அதில் வார்த்தையாக
உன் நினைவுகள்.

Friday, September 24, 2010

வாழ்க்கை.

 திரும்பி பார்க்கும் தூரமில்லை,
விரும்பி கேட்கும் வசதியுமில்லை.
நினைத்து பார்க்க நேரமில்லை,
நினைவு என்றும் மறைவதில்லை.
வளமாய் என்றும் இருப்பதில்லை,
வீழ்ச்சி என்பது முடிவும் இல்லை.

Tuesday, September 21, 2010

நிகழ்காலம்??

காசு இருந்தாதான்
கடவுளை பார்க்கமுடியும்
அது இறந்தகாலம்.
காசு இருந்தாதான்
கடவுளும் பார்க்கிறார்
இது நிகழ்காலம்.

ஏ நிலவே!!!

நீ 
வைரமாய் கடல் விழுந்து
வேகமாய் அலை எழுப்பி
கொஞ்சமாய்
கால் தழுவி
முழுவதுமாய்
என்னை அனைத்து
மெதுவாய் 
கற்பனையில் கரைந்து
நீ மறைந்து போனாயோ!!!

சூரியன்


மொட்டுக்கள் கூட
உன் வரவுக்காக
காத்திருக்கின்றன மலர்வதற்கு!!
ஐந்தும் ஆறும்
உன் தரிசனத்தில் தான்
உயிர் பெறும்!!
கருப்புக்கொடி காட்டினாலும்
உன் கடைமையை செய்கிறாய்!!
கடலில் விழுந்தாலும்
கரை சேர மறுக்கிறாய்!!
கவிஞர்கள் யாரும்
உன்னை வர்ணித்து
கவிதை எழுதுவதில்லை,
எழுதவும் நினைப்பதில்லை.
ஆனாலும்
நீ இல்லாமல் இந்த
உலகில்லை.
நீயும் அழகே!!!
சுட்டெரிக்கும் அழகு!!!

Thursday, September 16, 2010

காதல் இன்னும் வரவில்லை!!!

முத்தங்கள் பரிமாறிக்கொள்ள
உதடுகள் இல்லை.
சந்தங்கள் சரளமாய் பாட
சங்கீதம் இல்லை.
தேடிச்செல்ல தோன்றவில்லை
தேடி வருவதும் தெரிவதில்லை
காத்திருப்பு நரகமாக
கவிதை ஒன்றும் புரியவில்லை
ஏன் என்று புரியாமல் இருக்க
பதில் கண்டேன்
"காதல் இன்னும் வரவில்லை" என்று.

துணிந்து எழுந்துவிட்டேன்

துணிந்து எழுந்துவிட்டேன் -
போருக்கு அல்ல
அவளிடம் காதலை சொல்ல.
கஜினி முகமது எத்தனை முறை
போருக்கு சென்றான் என்றும் தெரியாது,
நான் துணிந்து எழுவது
எத்தனை முறை என்றும் தெரியாது.
ஒன்று மட்டும் உறுதியாக
சொல்லலாம் - நான்
இன்றும் சொல்லபோவதில்லை.

பின்பு ஏன்?
அவள் அருகில் செல்வேன்
என் சுவாசக்காற்றை எதிர்நோக்கி
காத்திருந்தவள் போல்
என் பக்கம் திரும்புவாள்.

அவள் கண்கள் பார்ப்பேன் - அது
இந்த எதிர்பார்ப்பு பிடித்திருப்பதை சொல்ல.
சொல்லாமல் திரும்புவேன் - அவள்
புரிந்துக்கொண்டால் என்று.

Wednesday, September 1, 2010

கால் - மனது

நடந்து சென்ற நாட்களில்
கால் வலித்தது - மனது அல்ல.
இருசக்கரத்தில் செல்லும் இன்று
காலும் வலிக்கிறது
மனதும்  வலிக்கிறது - ஒவ்வொரு
முறையும்  கால்-மனதுடன்
பெட்ரோல் போடும்பொழுது.

முரண்பாடு

கவிஞன் 1:
                  சமுக அவலங்கள் சாக்கடை அருகில்
                  தோன்றுவதில்லை
                  மாளிகையில் முடிவு செய்யப்படுகின்றன.
கவிஞன்  2:
                  பிறக்கும் உயிர் எங்கு பிறக்கவேண்டும்
                  என்று அந்த
                   உயிர் முடிவு செய்வதில்லை. 

 

எனக்குள்..

 எனக்குள்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள்
கேட்க தோன்றாத கேள்விகள்

சொல்லபடாத பதில்கள்
முடிவுபெறாத கவிதைகள்

எழுதப்படாத  கதைகள்
ஏங்கித்தவிக்கும் கவிஞன்
நடிக்க துடிக்கும் நடிகன்

இவைகளை அடக்கி ஆளும் மிருகம்.