Pages

Tuesday, December 13, 2011

கணக்கு வைத்த ஆப்பு

எத்தனை முறை சொல்லியும் புரியவில்லை
ஒரு முறை கூட சரியில்லை
கோபத்தில் கண்கள் சிவக்க
என்னை நோக்கி வருகிறாள்(?)
என் பாதங்கள் பின்வாங்க
ஓட முடியாமல் தவித்த
அந்த நிமிடங்கள் இன்றும் ஞாபகத்தில்
கணக்கில் "Fail" ஆன தருணங்கள்!!


Thursday, December 8, 2011

கலந்தேனே (பிறை தேடும்)

கேள்வியின் கேள்வியாய்

என் காதல்
என்னில் வளர்ந்தது
புரியாத பார்வையில்
அது பதில் ஒன்றை கண்டது
அலை அலையாய் மேகங்கள்
அதில் உந்தன் சுவாசங்கள்
எனை என்னில் தொலைத்தேனே
உன்னில் நானும் கலந்தேனே

எழுதாத வார்த்தைகள்
ஒன்றாக சேர்ந்ததே
உன் பெயரை காட்டுதே
உண்மை ஒன்றை சொன்னதே
மழை துளியாய்
இமை விழுந்தாய்
உடையாமல் உள்ளிறங்கி
உயிருக்குள் உணர்கிறேன்  -
இதயம் இன்று தொலைக்கிறேன்

கவிதைகள் காதல் சொல்கிறதே
கனவுக்குள் கண்கள் தொலைகிறதே


உன்னுடைய தேடல்கள்
என் கண்களில் ரசிக்கிறேன்
என்னுடைய கோபங்கள்
உன் கண்களில் காண்கிறேன்
தூங்காத நேரங்கள்
உன் ஞாபக தூறல்கள்
எனை அடித்து செல்லுமே
உன்னில் என்னை சேர்க்குமே

இதுவரையில் நானும் இருந்தேனே
இமை பொழுதில் உன்னில் கலந்தேனே

Thursday, December 1, 2011

கனவில் வந்தாள்

கனவில் வந்தாள்
கால் தடங்கள் இதயத்தில்
ஏதோ சொன்னால்
வார்த்தைகள் கல்வெட்டாய் இதயத்தில்
அழகாய் சிரித்தால்
ஓவியமாய் இதயத்தில்
மறைந்துப்போனால்
இதயத்தை காணவில்லை.

Friday, November 25, 2011

மழை!!

மழை!!
பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
மனம் குளிர்கிறது
கேட்டுகொண்டே இருக்கிறேன்
இதயம் லேசாகிறது
கைநீட்டி உணர்கிறேன்
கவிதை தோன்றுகிறது
எழுத துவங்கினேன்
எதுவும் எழுதவில்லை
ஒவ்வொரு துளியும் ஒவ்வொன்று சொல்கிறது
நான் எதை எழுத?

Wednesday, October 12, 2011

தேடி தேடி!!

ஏன் என்ற கேள்வி என்னை துரத்துகிறது
ஓடுகிறேன் பதில் தேடி
இல்லை என்ற பதில் கேட்கிறது
நடக்கிறேன் என்னை தேடி!!

Tuesday, October 4, 2011

விழிகளில் அவள்


விழிகளில் அவள்
வரைந்து வைத்த ஓவியம் போல்
விழிகளில் அவள்
இரவில் தோன்றும் நிலவு போல்
விழிகளில் அவள்
கடலில் எழும் அலையாக
விழிகளில் அவள்
பிறந்த குழந்தையின் அழுகை போல்
விழிகளில் அவள்
இதமாய் வீசும் தென்றலாய்

விழிகளில் அவள் 
அனலாய் கொதிக்கும் நெருப்பாய்
அர்த்தங்கள் மாறிய கவிதையாய்
தேடி சென்ற துன்பமாய்
கண்ணில் விழுந்த காயமாய்
கடவுள் தந்த பரிசாய்

Tuesday, September 20, 2011

அழகாக பேசும் கண்கள்
அது எங்கே போனது இன்று
அறியாத எந்தன் மனமோ
அலை மோதி அழுதது இன்று
தூங்காத இரவுகள் எல்லாம்
துக்கத்தில் என்னை துளைக்க
துடிக்காத இதயம
இறுகிப்போனது.

Saturday, September 10, 2011

சுவடுகள் என்னை கொல்லுதே!!

நிலாவில் நிலாவில் நிலாவில்
நீ பிறந்தாயோ!!
கனாவில் கனாவில் கனாவில்
காதல் சொன்னாயோ!!
இது என்ன மாற்றம்
என் மனதுக்குள் ஏக்கம்
முதல் நாள் இறந்து
மறுநாள் பிறந்து
இயற்கையின் விதியை உடைக்கிறேன்
இரவில் விழித்து
பகலில் உன்னை பார்த்து
தூக்கத்தை தொலைக்கிறேன்
ஏதோதோ சொல்லவே என் உதடு ஏங்குதே
சொல்லாமல் போகவே கல்லறையில் உறங்குதே
காலையின் அதிசயங்கள் என்னை பார்த்து கேட்குதே
மாலையின் மயக்கங்கள் என்னை பார்த்து சிரிக்குதே
பேசாத நேரங்களில் எல்லாம் உன் ஞாபகமே
ஞாபகங்கள் மறைந்தாலும் சுவடுகள் என்னை கொல்லுதே!!

Tuesday, September 6, 2011

தாமதம்!!

சில நன்மைகள் தந்தது
பல வலிகளையும் கொடுக்கிறது
விருப்பங்களை மண்ணுக்குள் புதைத்தது
வளர்ச்சியில் வேகம் குறைந்தது
எதிர்பார்த்த எதுவும் எனதில்லை என்றானது
என் ஆசை என்னை ஏளனமாய் பார்க்கிறது
என் கனவு கற்பனையாகி கல்லறையில் 
என்னை அடைக்கிறது.

Tuesday, August 2, 2011

நிரந்தரமல்ல

ஒவ்வொரு விடியலும்
ஒன்றை மட்டும் தான் சொல்கிறது
"இருள் என்பது இன்றியமையாதது
நிரந்தரமல்ல"

Thursday, July 21, 2011

பயம்

அவளது பயம் கலந்த பார்வை 
பயப்படவைக்கிறது
என்னை 
அடிமையாக்கிவிடுமோ என்று.

Saturday, July 2, 2011

கடவுளிடம் வரமாய் கேட்க...

கனவுக்குள் என்னை பூட்டினாய்
கண்திறக்க நீயும் மறுக்கிறாய்
காதலா என்று கேட்டால்
இல்லை என்கிறாய்
துடி துடிக்கும் இதயம் உன்னிடம்
கேட்காத கேள்வி கேட்குமே
பதில் கூட தேவை இல்லை
புன்னகை போதுமே
நேற்று வந்த மேகம்
இன்றும் பார்கிறேன்
மழையாய் என் மேல் பொழிய 
கடவுளை வேண்டினேன்
அந்த மின்னலை விடவும் 
அவள் பார்வை வெளிச்சம் தந்ததே
அந்த வானவில்லின் வண்ணங்கள் எல்லாம் 
அவள் ஆடையில் மறைந்ததே
நடைப்பாதையில் நடக்க 
அனுமதி கேட்கிறேன்
நடுரோட்டில் எனை மறந்து 
தானாய் நடக்கிறேன்
அவள் மூச்சிக்காற்றை தேடி
என் சுவாசம் அலைந்ததே
அவள் பின்னங்காலின் சுவடுகளில் 
என் கருவிழி கலந்ததே
கடவுளிடம் வரமாய் கேட்க விஷயம் கிடைத்ததே!!!

Thursday, June 30, 2011

சில பிரிவுகள்

சில பிரிவுகள்
நம்மை சுற்றி உள்ள 
உலகை மறைத்துவிடுகிறது
சில பிரிவுகள்
உலகம் நம்மை மறந்துவிட்டதாய்
நினைக்க தோன்றுகிறது
சில பிரிவுகள்
சிலுவையில் அறையப்படும் 
வலியை தருகிறது
சில பிரிவுகள்
சிந்தனைக்குள் புகுந்து சிரிகிறது
சில பிரிவுகள்
சத்தமில்லாமல் நிகழுந்துவிடுகிறது
சில பிரிவுகள்
இதயத்தில் எழுதப்பட்ட கல்வெட்டாக
கவிதையில் சொல்லப்படும் உவமையாக
பகலில் தோன்றிடும் கனவாக
காலையில் நிகழும் நிகழ்வாக
மாலையில் மறைந்திடும்

Wednesday, June 1, 2011

அவள் யார்

ஒவ்வொரு இரவிலும் 
அவளது கனவுகள்
ஒவ்வொரு பகலிலும் 
அவள் யார் என்ற தேடல்கள்
கற்பனைகளை அவளுக்காக சேமிக்கிறேன்
கவிதைகளை அவளுக்கு சமர்பிக்கிறேன்.

அமைதி

அமைதி சொல்லும் அர்த்தங்கள்
ஆயிரம் ஆயிரம்
ஆயிரத்தில் ஒன்று மட்டும் உண்மை சொல்லும்
கேட்காத வார்த்தை கூட காதில் கேட்கும்
கேள்விக்கு எல்லாம் பதில் கிடைக்கும்
ஏன்? எதற்கு? எப்படி?
இப்படி பல எ'களுக்கு விடை தெரியும்
கிடைத்த விடையும் கேள்வியாகும்
பார்த்த முகங்கள் பதிலாய் தோன்றும்
மனதை மூளை வென்றுவிடும்
மனமும் தோல்வியை ஏற்றுகொள்ளும்.

ஓர் உயிராய்

தினம் ஒன்று சொல்லி
கனவுக்குள் தள்ளி
முகம் கூட தெரியாமல்
என்னை கொலை செய்தாய்
நீ இல்லை என்றால்
நான் இல்லை என்றாய்
நான் இங்கு இருக்க
நீ எங்கே போனாய்
புரியாமல் தவிக்கிறேன் நான்
புதருக்குள் கிடக்கிறேன்
புவி உலகில் ஓர் உயிராய்.

Tuesday, May 31, 2011

சிக்கித்தவிக்கிறேன்

என் கோபம்
என்னை விலகிச்செல்ல சொல்கிறது
என் நினைவுகள்
நான் விலகிசெல்லாமல் காக்கிறது.
நினைவுகள் மட்டுமே உறவுகளை காக்குமா?
தெரியவில்லை.
ஆனால், நான்
நினைவிற்கும் நிலைமைக்கும் 
நடுவில் சிக்கித்தவிக்கிறேன்.

சிரிப்பு

எப்பொழுதும் சிரிப்பவன் கோபப்பட்டால்
அதுவும் சிரிப்பாகிவிடுகிறது.

நான் அடிமை

அன்னைக்கு நான் அடிமை
அவள் கண் அசைவிற்கு நான் பொம்மை
இன்பத்தில் இருந்தாலும்
துன்பத்தில் இருந்தாலும்
இதயத்தில் என்றுமே அவள் தெய்வம்
அளவில்லாத பாசமும்
அடங்காத கோபமும்
உரிமையுடன் சேருமிடம் அவள்
பொய் என்று தெரிந்தாலும்
உண்மையாகவே ஏற்றுக்கொள்வாள்
பசி என்று சொல்லாமல் பார்த்துக்கொள்வாள்
பணம் இல்லை என்றாலும்
முகம் கோண மாட்டாள்
முடியாது என்ற வார்த்தை தெரியாது
நடிப்பு என்பது அவள் அறியாதது
நான் என்ற எண்ணம் கிடையாது
நாம் என்ற சொல்லின் உயிர்நாடி அவள்.

Thursday, April 21, 2011

அசைந்திடும்

இரவுகளை முழுவதுமாய் ஆட்சிசெய்கின்றாய்
இதயத்தில் கனவுகளை பறக்கவிடுகின்றாய்
உயிர் இன்று உயிர் இன்று உன் வசம்
சிறகுகள் முளைத்திடும் தினம் தினம்
ஒரு வழி பாதையாய் கண்கள் மாறிப்போனதே
வானில் எங்கும் மேகங்கள் 
வானை தொடுவதில்லையே
பெண்மை பேசும் காதல்கள்
புயலாய் அழிப்பதில்லையே
பூட்டி வைத்திடும் ஆசைகள்
அசையா சொத்தா c.

Tuesday, March 22, 2011

கனவு? நிஜம்?

என் ஒவ்வொரு இரவுகளிலும் 
விழித்து கொள்கிறேன்
என் கனவுலகில் வாழ,
என் ஒவ்வொரு 
பகலிலும் உறங்கிவிடுகிறேன்
இந்த நிஜவுலகில் வாழ,
கட்டாயத்தால் ஆசையை 
அடக்குகிறேன் நிஜவுலகில்,
ஆசையை கட்டாயம் 
ஆக்குகிறேன் கனவுலகில்,
எது உண்மை 
எது பொய் என்று 
எனக்கும் தெரியும்,
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு 
நிஜமா இருந்தாலென்ன? 
கனவா இருந்தாலென்ன?

Monday, February 14, 2011

காதலர் தின வாழ்த்துக்கள்.

காதலை கொண்டாடும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்

இன்று காதலர் தினமாம்
காதல் சொல்ல காதலி இல்லை என்றாலும்
வாழ்த்துக்கள் சொல்ல ஆசைப்படுகிறேன்
எனக்காக பிறந்து வளர்ந்து வரும்
என் காதலி(வருங்கால மனைவி)க்கு.

என் காதல்

என் காதல் புனிதமானது
தாய் பால் போல.

என் காதல் அழகானது
பிறந்த குழந்தை போல.

என் காதல் அழியாதது
நான் அழியும் வரை.

என் காதல் வானில் தோன்றும்
நிலவும் அல்ல
சூரியனும் அல்ல
அது வானை மறைக்கும் மேகம்.

என் காதல் மண்ணில் இருக்கும்
உயிரும் அல்ல
உடலும் அல்ல
அது என்னுள் இருக்கும் உலகம்.

என் காதல் கடலில் மிதக்கும்
கப்பலும் அல்ல
மீன்களும் அல்ல
அது கடலோடு கலந்திருக்கும் உப்பு.

என் காதல் சூறாவளியும் அல்ல
தென்றலும் அல்ல
அது காற்றில் கலந்திருக்கும் ஆக்சிஜன்.

என் காதல் தீயின் உக்கிரம் அல்ல
அது தீயின் திமிர் போன்றது.

Sunday, February 13, 2011

காதல்

காதல் கண்மூடித்தனமானது தான்
கண்கள் மூடி மட்டுமே
கனவுகள் காண்பது இல்லை.

Sunday, January 30, 2011

என்ன கொடுமை

கொடுமை-1

தூக்கம் வரவில்லை எழுதுகிறேன்
எழுத நினைக்கும் போது தூக்கம் வருகிறது
பசித்த போது சாப்பிட நேரமில்லை
நேரம் கிடைத்த போது பசிக்கவில்லை
கல்லூரி காலங்களில் காதல் ஆசை வரவில்லை
ஆசை வந்தபோது கல்லூரியில் நானும் இல்லை
காதலிக்க தோன்றவில்லை.

கொடுமை-2

25 ல் பணம் தேடி ஓடுகிறான்
பணம் சம்பாதிக்க,
45 ல் மருத்துவமனை தேடி ஓடுகிறான்
சம்பாதித்த பணத்தை கொடுக்க,
பணமும் போனது
வயதும் போனது.

Saturday, January 29, 2011

என்ன நியாயம்??

மரணதண்டனை கையெழுத்திட்ட
எழுதுகோல் உடைக்கப்படும் - இது சட்டம்
என்ன நியாயம் இது?
உயிர் இல்லை என்றால் உடைத்துவிடலமா?
மரணதண்டனை கையெழுத்திட்ட
நீதிபதியை என்ன செய்யலாம்?

பிழை??

எழுத்துப்பிழை - எழுதுகோலின் குற்றமா?
எழுதியவனின் குற்றமா?
எழுதுகோல் எழுதியவனின் கையில் இருப்பதால்
அதுவும் குற்றவாளி ஆகிறது என்பதை விட
தண்டனையும் உடனே பெறுகிறது
எப்படி?
சில சமயம் அவன் பல்லால் கடிபட்டு,
சில சமயம் வேகமாக கிழே போடப்படுகிறது,
சில சமயம் மேசையில் குத்தப்படுகிறது,
இன்னும் சில சமயம்
உடைக்கப்படுகிறது.

Saturday, January 15, 2011

பொங்கலோ பொங்கல்

பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் பொங்கட்டும்
நாடு வளரட்டும்
அடிமை தலை நிமிரட்டும்
அந்நிய முதலீடு பெருகட்டும்
நம் அறிவுதான் நம் முதலீடு என்பதை
நம் மக்கள் உணரட்டும்
விளைநிலங்கள் விலைபோகும் நிலை மாறட்டும்
நம் முதுகெலும்பு(விவசாயி) (தலை) நிமிரட்டும்
நம் முகவரி(கலாச்சாரம்) தொடரட்டும்
தொட்டதெல்லாம் நல்லவையாக
இருப்பின் வெற்றிகள் கிட்டட்டும்
தீமைகள் தண்ணீர் பட்ட தீயாய் அணையட்டும்
"தை பிறந்தால் வழிபிறக்கும்" என்பார்கள்
பிறந்தது தை வழியை தேடுங்கள்..
விளைநிலங்கள் செழிக்கட்டும்
விவசாயின் வாழ்க்கை உயரட்டும்
அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
பொங்கலோ பொங்கல்.

Friday, January 14, 2011

உயிர் இருக்கிறது??

சிந்தனையில் உதித்த சோகங்கள் உயிர் பெற்று நடக்க
உதிரத்தில் கொதிநிலை கண்டேன்.
அதை நம்பமுடியாமல் 
இது நிஜமா என்று யோசிப்பதற்குள்
இதயத்தில் விழுந்த அடியில் மூளை கலங்க
முற்றிலும் தோற்றுபோய்
உலகின் கடைசி மூலையில்
தனியாக நிற்பதாய் உணர்கிறேன்.
தூள் தூளாய் உடையும் கண்ணாடி
ஆனால்
நானோ துண்டு துண்டாய் வெட்டப்பட்ட
கண்ணாடி - உயிர் இருக்கிறது.

Sunday, January 2, 2011

புத்தாண்டு கொண்டாட்டம் - 2011- படங்கள் - 4

லண்டன்







சிங்கப்பூர்










சிட்னி

புத்தாண்டு கொண்டாட்டம் - 2011- படங்கள் - 3

Rio de Janeiro city, Brasil

The Champs Elysees, Paris

Toronto

Twin Tower

Twin Towers

Victoria harbour, Hong Kong

Taiwan

Taiwan's tallest building, Taipei

Kankaria Lake, Ahmedabad

புத்தாண்டு கொண்டாட்டம் - 2011- படங்கள் - 2

Bangalore



Burj Khalifa, the tallest building in the world, Dubai


Copacabana beach, Brasil


Hong Kong

Hong Kong's Times Square

புத்தாண்டு கொண்டாட்டம் - 2011- படங்கள்

ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் - 2011- படங்கள்















Saturday, January 1, 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.